- Home
- Cinema
- போதும்டா சாமி... ஆளவிடுங்க!! ரஜினி, விஜய்லாம் வேண்டாம் இவர் போதும் - ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ அப்டேட்
போதும்டா சாமி... ஆளவிடுங்க!! ரஜினி, விஜய்லாம் வேண்டாம் இவர் போதும் - ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ அப்டேட்
ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வந்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இளம் நடிகர் ஒருவருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

அஜித் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss). முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர், அடுத்ததாக விஜயகாந்த்தின் ரமணா படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த இப்படம் சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதன்பின் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படம் பிளாப் ஆக, பின்னர் விஜய்யின் துப்பாக்கி (Thuppakki) படம் மூலம் கம்பேக் கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து விஜய்யை வைத்து கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார்.
இதையடுத்து ரஜினியை வைத்து தர்பார் (Darbar) படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய்யின் 64-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் முருகதாஸ். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த சமயத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அப்படத்தில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து அந்த வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு சென்றது. அதன்பின் உருவானது தான் மாஸ்டர் (Master) திரைப்படம்.
இவ்வாறு பிளாக்பஸ்டர் இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss), தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் என ஏராளமான ஹிட் படங்களை தயாரித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில் அவர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் (Gautham Karthick) ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன் குமார் என்பவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... BB Ultimate :அனிதாவிடம் டபுள் மீனிங்கில் பேசிய பாலா... கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள் - வார்னிங் கொடுப்பாரா கமல்?