BB Ultimate :அனிதாவிடம் டபுள் மீனிங்கில் பேசிய பாலா... கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள் - வார்னிங் கொடுப்பாரா கமல்?
பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) நிகழ்ச்சியில் டாஸ்க்கின் போது பாலா இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் (KamalHaasan) தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும், இரண்டாவது வார இறுதியில் சுஜாவும் (Suja) வெளியேற்றப்பட்டனர்.
தற்போது 12 பேர் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட்டில் (BiggBoss Ultimate) உள்ளனர். இவர்களுக்கு வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதன்படி இந்த வாரம் இதயம் முரளி கலைக் கல்லூரியாக பிக்பாஸ் வீடு மாறி உள்ளது. இதில் போட்டியாளர்கள் 80ஸ் ஹீரோ ஹீரோயின்கள் போல் தங்களை மாற்றிக் கொண்டு கல்லூரியில் பாடம் படிக்க செல்வது போன்று டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டாஸ்கின் போது இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த டாஸ்கின் படி கல்லூரியின் ஆசியையாக இருக்கும் அனிதாவுக்கு மாணவரான நிரூப் (Niroop) காதல் கடிதம் எழுதுகிறார். ஆனால் இதை ஏற்க மறுக்கும் அனிதா (Anitha), ‘இவன் இருக்குற உயரத்துக்கு எனக்கு லவ் லெட்டர் கொடுக்குறான்’ என பாலாவிடம் முறையிடுகிறார்.
இதற்கு பதிலளித்த பாலா (Bala), ‘அவன் உங்க உயரத்துக்கு முழங்கால் போட்டுக்கொள்வான்’ என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்தது பிக்பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பாலா பேசத்தெரியாமல் பேசி வருவதாக ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். இதனை கமல் கண்டிக்க வேண்டும் என்கிற குரல்களும் வலுத்து வருகின்றன. பலாவை கண்டித்து கமல் வார்னிங் கொடுப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்.... ஒரே ஒரு ஃபோன் காலில் முடிவுக்கு வந்த 13 வருட விரிசல்! ‘இளையராஜா - கங்கை அமரன்’ பிரிவும்... சந்திப்பும்