- Home
- Cinema
- அபர்ணாதாஸ் பகிர்ந்த பீஸ்ட் பின்னணி புகைப்படங்கள்...ரசிகர்கள் கொண்டாடும் அன்சீன் போட்டோஸ்..
அபர்ணாதாஸ் பகிர்ந்த பீஸ்ட் பின்னணி புகைப்படங்கள்...ரசிகர்கள் கொண்டாடும் அன்சீன் போட்டோஸ்..
தற்போது பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

beast
சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டு வருகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் கடந்த 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
beast
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
beast
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் சென்னை, ஜார்ஜா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. அது குறித்தான புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.
beast
படம் வெளியான சில நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்று போதிலும் நல்ல வசூலை குவித்தது ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது பீஸ்ட்.
beast
தீவிரவாதிகளால் கைப்பற்றப்படும் வணிக வளாகத்தை சோல்ஜராக இருக்கும் நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் மையக்கதை. ஒரே நாளில் காதல், ஆக்சன், காமெடி என அனைத்தையும் கொடுத்து விட்டார் நெல்சன்
beast
பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் செம ஹிட் கொடுத்தது இதில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருக்க, மற்றொரு பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார்.
beast
திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படம் குறித்த போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட விஜய் படக்குழுவிற்கு கொடுத்த ட்ரீட் குறித்த போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
beast
இந்நிலைகள் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.