கங்கனாவும் இல்ல; திரிஷாவும் இல்ல! 50-வது படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண ரெடியான தனுஷ்
தனுஷ் நடித்து, இயக்க இருக்கும் 50-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராகவும் விளங்கி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த வகையில் தமிழில் தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் பா. பாண்டி. ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
பா.பாண்டி படத்துக்கு பின்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார் தனுஷ். அதில் அதிதி ராவ், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், தற்போது மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
இதையும் படியுங்கள்... டாடா முதல் போர் தொழில் வரை... 2023-ல் அறிமுக படத்திலேயே அதகளப்படுத்திய இளம் இயக்குனர்கள்
அதன்படி தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 50-வது படத்தை அவரே இயக்க உள்ளார். தற்காலிகமாக டி50 என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாம். இதுதவிர தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. முதலில் கங்கனா, திரிஷா ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது இறுதியாக அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். இவர் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஹேமமாலினியோடு காதல்; ஸ்ரீதேவி, ரேகா உடன் ரகசிய உறவு - ரியல் லைஃப்பில் மாமாகுட்டியாக வலம் வந்த பிரபல நடிகர்