அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த ‘காதி’ படம் தள்ளிப்போகிறதா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள காதி திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது.

Anushka Shetty's 50th film 'Ghaati': New poster released! தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்துக்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் திண்டாடி வரும் அனுஷ்காவுக்கு தற்போது வயதும் 40ஐ கடந்துவிட்டதால், பட வாய்ப்புகளும் குறைந்த வண்ணம் உள்ளான. சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு, நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நடித்துள்ள படம் தான் காதி. இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Ghaati Movie Anushka Shetty
போஸ்டரில் அனுஷ்கா டெரர் லுக்கில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. தலையில இருந்தும், கையில இருந்தும் ரத்தம் வடிஞ்சிட்டு இருக்க அனுஷ்கா புகை பிடிக்குற மாதிரி ஸ்டில் இடம்பெற்று இருந்தது. ஒரு ஆதிவாசி பெண் போல் அனுஷ்கா அதில் காட்சியளித்தார். ஒரு லேடி கேங்ஸ்டர் கதையாக தான் இந்த காதி திரைப்படம் உருவாகி இருக்கிறதாம். 2010-ம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான வேதம் படத்துக்கு பின்னர் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடியும், அனுஷ்காவும் ஒன்றாக இணையும் படம் தான் இந்த ‘காதி’.
இதையும் படியுங்கள்.... Anushka Shetty : மாஸ் ஹீரோவுடன் நடிச்ச எல்லா படமும் தோல்வி, ஒரு ஹிட் கூட இல்ல: அப்செட்டில் அனுஷ்கா!

Ghaati Release Update
இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் கடந்த ஆண்டே வெளியிட்டிருந்தார்கள். தெலுங்கில் பெரிய பேனரான யுவி கிரியேஷன்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. 'இரை, கிரிமினல், இதிகாசம்' காட்டி இனி ராணி ஆட்சி செய்வாள்' என்கிற கேப்ஷனோட தான் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள். முன்னதாக வந்த அப்டேட்டின் படி காதி திரைப்படம் ஏப்ரல் 18ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தார்கள். ஆனா படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதம் தான் இருப்பதால் அது பற்றி அடுத்தகட்ட அப்டேட் எதுவும் வராததால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது என தகவல் பரவி வந்தது.

Anushka
படத்தின் புரமோஷன்களும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்படி காதி திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. காதி படத்தை தொடர்ந்து கத்தனார் என்கிற மலையாள படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்.... வயசானாலும் திருமணமே செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்!