- Home
- Cinema
- 'பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்' என கூறிய சர்ச்சை! மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்!
'பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்' என கூறிய சர்ச்சை! மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்!
Anurag Kashyap Apologises: திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் 'பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்' என்று சர்ச்சைக்கு விதமான வகையில் கூறிய கருத்துக்கு, பலத்த எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதற்க்கு தற்போது நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப்:
பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இந்நிலையில் நேற்று தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில், பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
Non Released Movies
தணிக்கை வாரியத்தின் கோபத்திற்கு ஆளாகி வெளியாகாமல் உள்ளது:
இதுகுறித்து அனுராக் காஷ்யப் கூறும் போது , சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் 'பஞ்சாப் 95', 'டீஸ்', 'தடக் 2' போன்ற பிற படங்களும் தணிக்கை வாரியத்தின் கோபத்திற்கு ஆளாகி வெளியாகாமல் உள்ளது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். “இதேபோல், இந்த சாதி, பிராந்தியம், இனவெறி அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வேறு எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியவில்லை. கண்ணாடியில் சொந்த முகத்தைப் பார்க்க மிகவும் வெட்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவு தரும் படம் பற்றி வெளிப்படையாகப் பேசக்கூட முடியாத அளவுக்கு வெட்கப்படுகிறார்கள், கோழைகள்” என்று காஷ்யப் சாடி உள்ளார்.
Anurag Kashyap Statement:
பிராமணர்களுக்கு எதிராக அனுராக்கின் கருத்து:
அதே போல் பிராமணர்களுக்கு எதிராக அனுராக்கின் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடமும் காட்டமாக பதில் கொடுத்த அனுராக்; நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் உனக்கென்ன பிரச்சனை என அவர் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து பலர் சமூக வலைப்பக்கங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
Anurag Kashyap Apologies:
பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு:
இந்த எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அனுராக் காஷ்யப் பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில் "தனது நோக்கம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் அனுராக் காஷ்யப் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு கேட்டு போட்டிருக்கும், பதிவில் "மனுவாதிகள் மற்றும் கலாச்சாரமற்ற பிராமணர்களுக்கு தான் மாஃபி" என்று குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.
Conditional Pardon:
நிபந்தனையோடு மன்னிப்பு:
இந்த மன்னிப்பு, என்னுடைய பதிவிற்காக அல்ல, ஆனால் சூழலில் இருந்து அகற்றப்பட்ட அந்த ஒரு வரிக்கும், வெறுப்புணர்வை ஏற்படுத்தியதற்கும். உங்கள் மகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு சன்ஸ்காரின் முக்கியஸ்தர்களிடமிருந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வருகிறது.
Don't Slam My Family
என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை:
எனவே என்ன சொன்னாலும் அதைத் திரும்பப் பெற முடியாது, நானும் அதைத் திரும்பப் பெற மாட்டேன், ஆனால் நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை, சொல்லவும் இல்லை. எனவே நீங்கள் என்னிடமிருந்து மன்னிப்பை விரும்பினால், இதுவே எனது மன்னிப்பு. பிராமண மக்களே, பெண்களை விட்டுவிடுங்கள், அது மனுவாதத்தில் இல்லை. நீங்கள் யார் நீங்கள் ஒரு பிராமணர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீதமுள்ளவற்றுக்கு, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.