MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anchor DD : கர்ப்பமாக இருக்கிறாரா டிடி?.... வளைகாப்பு போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - பின்னணி என்ன?

Anchor DD : கர்ப்பமாக இருக்கிறாரா டிடி?.... வளைகாப்பு போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - பின்னணி என்ன?

Anchor DD : தொகுப்பாளினி டிடி படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 22 2022, 06:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பேச்சால் கவர்ந்தவர் டிடி

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்ய தர்ஷினி. செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. இவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. 

24

விவாகரத்தில் முடிந்த திருமணம்

இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த்தை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, அவ்வப்போது சினிமாவிலும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

34

படங்களில் பிசி

அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. மேலும் சில படங்களிலும் டிடி நடித்து வரும் நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

44

டிடி கர்ப்பமா?

இந்நிலையில், அது படத்தின் ஷூட்டிங்கிற்காக போட்ட கெட் அப் என தெரியவந்துள்ளது. நடிகை டிடி தற்போது சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு வளைகாப்பு நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Ajith shalini :23 வருடங்களாக தொடரும் காதல்... ரொமாண்டிக் மூடில் அஜித் - ஷாலினி! இணையத்தை கலக்கும் லவ்லி கிளிக்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved