MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith shalini :23 வருடங்களாக தொடரும் காதல்... ரொமாண்டிக் மூடில் அஜித் - ஷாலினி! இணையத்தை கலக்கும் லவ்லி கிளிக்

Ajith shalini :23 வருடங்களாக தொடரும் காதல்... ரொமாண்டிக் மூடில் அஜித் - ஷாலினி! இணையத்தை கலக்கும் லவ்லி கிளிக்

Ajith shalini : அஜித் - ஷாலினி தம்பதி காதலிக்க ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிறது. அதனைக் குறிப்பிட்டு ஷாலினியின் தங்கை ஷாமிலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரல் ஆகி வருகிறது. 

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 22 2022, 05:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அஜித் - ஷாலினி தம்பதி

தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் நட்சத்திர ஜோடிகளில் அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எந்த அளவுக்கு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். 

25

அமர்களமான காதல்

இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான அமர்களம் படத்தின் போது அஜித் - ஷாலினி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, அஜித் - ஷாலினி தம்பதியின் திருமணம் மிகவும் கிராண்டாக நடந்தது.

35

திருமணத்துக்கு பின் நடிப்புக்கு டாடா காட்டிய ஷாலினி

முன்னணி நடிகையாக வலம்வந்தபோதே திருமணம் செய்துகொண்ட ஷாலினி, திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். அன்றிலிருந்து சிறந்த குடும்பத் தலைவி ஆகவும், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து செய்து வருகிறார்.

45

மீடியா வெளிச்சத்தை விரும்பாத அஜித்

மீடியா வெளிச்சத்தை முற்றிலும் விரும்பாதவர் நடிகர் அஜித், அவரது குடும்பத்தினரும் அதனையே பின்பற்றி வருகின்றனர். இருப்பினும் நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படம், அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாவதுண்டு. அவ்வாறு வெளியாகும் புகைப்படங்களுக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு உண்டு.

55

ரொமாண்டிக் புகைப்படம் வைரல்

அந்த வகையில், தற்போது அஜித் - ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் - ஷாலினி தம்பதி காதலிக்க ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிறது. அதனைக் குறிப்பிட்டு ஷாலினியின் தங்கை ஷாமிலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் படு வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தபடி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Aishwarya : தனுஷுடனான பிரிவுக்கு பின் தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா... பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved