Pushpa : டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கிய புஷ்பா... முதன்முறையாக விஜய்யை பீட் பண்ணி கெத்து காட்டிய அல்லு அர்ஜுன்
Pushpa : புஷ்பா திரைப்படத்தின் தமிழ் பதிப்பு கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. டிவி-யிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டமாக தயாராகி இருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சமந்தா, ஒரு ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலைப் போல் படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சுமார் 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.
புஷ்பா திரைப்படத்தின் தமிழ் பதிப்பு கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. டிவி-யிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் டிஆர்பி-யிலும் முதலிடம் பிடித்துள்ளது. அன்றைய தினம் இப்படத்துக்கு போட்டியாக ஒளிபரப்பப்பட்ட விஜய்யின் பிகில் திரைப்படம் 9.92 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருந்த நிலையில், புஷ்பா படம் 10.95 ரேட்டிங் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல் அந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட நடிகர் விஜய்யின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி 5.68 ரேட்டிங்கை மட்டும் பெற்றுள்ளது. விஜய் 10 ஆண்டுகளுக்கு பின் கொடுத்த பேட்டி என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட அதற்கு கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... ரூ.1 கோடி மதிப்புள்ள செட் முன்பு ‘பீஸ்ட்’ பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்