புஷ்பா 3 எப்போது? சுகுமார் திட்டம் ரெடி.. இந்த முறை வேற லெவல்!
Allu Arjun Pushpa 3 Shooting Start Date : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து அவரை பான் இந்திய நடிகராக மாற்றிய படம் தான் புஷ்பா. இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் இப்போது இதன் 3ஆம் பாகம் உருவாக இருக்கிறது.

புஷ்பா 2 : பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்த அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். தமிழ் தவிர மற்ற மொழி பட நடிகர்களுக்கு ஏதாவது ஒரு படம் அவர்களை மிகப்பெரிய ஸ்டாராக்கிவிடுகின்றன. அப்படி மிகப்பெரிய ஸ்டாரான நடிகர்கள் யார் யார் என்றால் பிரபாஸ் (பாகுபலி), காந்தாரா (ரிஷப் ஷெட்டி) இந்த வரிசையில் இடம் பெற்றிருப்பவர் தான் அல்லு அர்ஜூன்.
'புஷ்பா 2' வசூல்
இவருக்கு புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அதனுடைய 2ஆம் பாகமும் அதைவிட நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த 2 படங்களுமே அவரை பான் இந்திய நடிகராக மாற்றின. இப்போது இதனுடைய 3ஆம் பாகமும் உருவாக இருக்கிறது.
அட்லீயுடன் உலகளாவிய படத்தில் இணையும் அல்லு அர்ஜுன்
தற்போது அட்லீ இயக்கத்தில் 'AA22' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அறிவியல் புனைகதை மற்றும் சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகிறது. 'புஷ்பா 3' குறித்த நல்ல செய்தியை தயாரிப்பாளர் ரவிசங்கர் பகிர்ந்துள்ளார். 'புஷ்பா 3' படப்பிடிப்பு 2027 இறுதியில் தொடங்கும் என்றும், அதற்கான கதையை சுகுமார் தயார் செய்துள்ளதாகவும் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.