- Home
- Cinema
- என்ன தங்கமா குவியுது.. ராம் சரண் மகளுக்கு கிஃப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன் - அந்த Costly பொருள் என்ன தெரியுமா?
என்ன தங்கமா குவியுது.. ராம் சரண் மகளுக்கு கிஃப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன் - அந்த Costly பொருள் என்ன தெரியுமா?
தமிழில் இதுவரை நேரடியாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், கோலிவுட்டிலும் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் ராம்சரண். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் ராம்சரண் தந்தையானது அவருடைய குடும்பத்தை பெருமளவு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வரும் ஒரு சிறந்த நடிகர் தான் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம்சரண் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் உபாசனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது, அந்த குடும்பத்தை மிகப்பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் சிரஞ்சீவியை தாத்தாவாகியுள்ளார் ராம்சரண். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
தங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை ஒளிர வைத்துள்ளார் தனது பேத்தி என்று, தாத்தா சிரஞ்சீவி மிக சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ராம்சரண் குடும்பத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி, தங்க தொட்டில் ஒன்றை ராம் சரண் மகளுக்கு பரிசாக அளித்த நிலையில், தங்கத்தால் ஆன ஒரு பொருளை தனது மருமகளுக்கு கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் அவர்கள். அல்லு அர்ஜுன் தனது மருமகளுக்கு, குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு தங்க சிலேட் ஒன்றை பரிசளித்துள்ளார். ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவுக்கே செம்ம டஃப்... கங்கனாவின் சந்திரமுகி லுக்கை வெளியிட்ட படக்குழு!