இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தில் இருந்து, ரங்கனா ரனாவத்தின் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு தற்போது ராகவா லாரன்ஸை கதாநாயகனாக வைத்து இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட, உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் ராகவா லாரன்ஸின் 'வேட்டையன்' கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது கங்கனாவின் சந்திரமுகி லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மஹாராணி போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து, கங்கனா பேரழகியாக ஜொலிக்கிறார்.

கயல் சீரியலில் எழில் திருமணம் யாருடன் நடந்தது தெரியுமா? செம்ம ட்விஸ்ட்... வைரலாகும் புகைப்படம்..!
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கும் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், கங்கானாவின் தோற்றம் இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த படத்தில், கங்கானாவுக்கு ஆடை அலங்காரத்திற்காக, நான்கு முறை தேசிய விருதை வென்ற நீட்டா லுல்லா என்பவர் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படத்திற்க்கு, ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
