3 மாசத்தில் 2ஆவது அபார்ட்மெண்டையும் விற்ற அக்ஷய் குமார்; லாபம் இத்தனை கோடியா?
Akshay Kumar Sold His Apartment : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 3 மாதத்தில் தன்னுடைய 2ஆவது அபார்ட்மெண்டையும் விற்று 183.54% லாபம் பார்த்திருக்கிறார்.

Akshay Kumar Sold His Apartment: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பை போரிவலி ஈஸ்ட் ஏரியாவில் இருந்த தன்னோட ஒரு சொகுசு அப்பார்ட்மென்ட்டை கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார். நேற்று முன் தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு தான் தன்னோட அபார்ட்மெண்டை அவர் விற்ப்னை செய்திருக்கிறார். இந்த அப்பார்ட்மென்ட் 'ஸ்கை சிட்டி' பில்டிங்கில் இருக்கிறது. இத ஓபராய் ரியாலிட்டி கட்டிருக்காங்க. இந்த சொசைட்டி 25 ஏக்கர்ல பரந்து விரிஞ்சிருக்கு. அக்ஷயோட இந்த சொகுசு அப்பார்ட்மென்ட் 1,073 ஸ்கொயர் ஃபீட். இதில் 2 கார் பார்க்கிங் வசதியும் இருக்கிறது.
Akshay Kumar Apartment
அப்பார்ட்மென்ட் விற்று அக்ஷய் குமாருக்கு இத்தனை கோடி லாபமா?
தெரிஞ்சது என்னன்னா அக்ஷய் குமார் 2017ல இந்த அப்பார்ட்மென்ட்ட 2.37 கோடிக்கு வாங்குனாரு. இப்ப 2025ல அத 4.35 கோடி ரூபாய்க்கு வித்துட்டாரு. இதனால அவருக்கு இந்த டீல்ல 183.54% லாபம் கிடைச்சிருக்கு. இந்த பரிவர்த்தனைக்கு அக்ஷய் குமார் 26.1 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டியும், 30,000 ரூபா ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணமும் கட்டிருக்காரு. ஆனா இது வரைக்கும் அக்ஷய் குமார் இது பத்தி எதுவும் சொல்லவில்லை.
Akshay Kumar Property Investment,
உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல, அக்ஷய் குமார் ஜனவரி 2025ல இதே சொசைட்டில இருந்த தன்னோட இன்னொரு அப்பார்ட்மென்ட்டையும் விற்பனை செய்திருக்கிறார். அந்த பிளாட்டையும் நவம்பர் 2017ல 2.38 கோடி ரூபாய்க்கு வாங்குனாரு. ஜனவரில அத 4.25 கோடி ரூபாய்க்கு வித்துட்டாரு.
Akshay Kumar Sold His Apartment
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள்
அக்ஷய் குமாரோட 2025 ஓட முதல் படம் 'ஸ்கை ஃபோர்ஸ்' ஜனவரி 24ஆம் தேதி தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருச்சு. இந்த படம் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. இந்த படத்துலதான் வீர் பஹாரியா பாலிவுட்ல அறிமுகமாகியிருக்காரு. இந்த படத்துல அக்ஷய், வீர் தவிர சாரா அலிகான், நிம்ரத் கவுர், ஷரத் கேல்கர் இவங்களும் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க.
Akshay Kumar Sold His Luxury Apartment
1965ல பாகிஸ்தானோட சர்கோதா ஏர்பேஸ் மேல இந்தியா செஞ்ச பதிலடி தாக்குதல அடிப்படையா வச்சு இந்த படம் எடுத்திருக்காங்க. இத தவிர அக்ஷயோட வரப்போற படங்கள்னு பாத்தா 'ஹவுஸ்ஃபுல் 5', 'ஜாலி எல்எல்பி 3', 'பூத் பங்களா' மாதிரி நிறைய படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு.