- Home
- Cinema
- பர்ஸ்ட் பிளாப்; நெக்ஸ்ட் ஹிட்... 2025-ல் தரமான கம்பேக் கொடுத்த டாப் 5 தமிழ் ஹீரோஸ் ஒரு பார்வை
பர்ஸ்ட் பிளாப்; நெக்ஸ்ட் ஹிட்... 2025-ல் தரமான கம்பேக் கொடுத்த டாப் 5 தமிழ் ஹீரோஸ் ஒரு பார்வை
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு ருசீகர சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆண்டு அஜித், ரியோராஜ், தனுஷ் உள்பட ஒரு வெற்றி, ஒரு தோல்வியை ருசித்த டாப் 5 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

Tamil Actors With Hit and Flop on 2025
2025-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பங்களைப் பற்றியும், தமிழ் சினிமா நடிகர்கள் செய்த மகத்தான சாதனைகளைப் பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு ஒரு தோல்விப் படம், ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ள டாப் 5 நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
அஜித்குமார்
2025-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இதில் முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அந்த தோல்வியில் இருந்து இரண்டே மாதங்களில் கம்பேக் கொடுத்துவிட்டார் அஜித். இதையடுத்து ஏப்ரலில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன குட் பேட் அக்லி மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி அசத்தினார். இப்படம் 247 கோடி வசூல் செய்தது.
ரியோராஜ்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ரியோராஜும் இந்த ஆண்டு இரண்டு படங்களை வெளியிட்டார். அவர் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் ஸ்வீட் ஹார்ட். மார்ச் மாதம் திரைக்கு வந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதை ஈடுசெய்யும் விதமாக அக்டோபரில் அவர் நடிப்பில் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏஸ் மற்றும் தலைவன் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வந்திருந்தன. இதில் முதலில் ரிலீஸ் ஆன ஏஸ் திரைப்படம் வந்த வேகத்திலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டதால் தோல்வி அடைந்தது. இதன்பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்து மாஸ் காட்டியது.
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு மார்கன் மற்றும் சக்தித் திருமகன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் மார்கன் தோல்வி அடைந்தாலும், சக்தித் திருமகன் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது.
தனுஷ்
நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டு மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் முதலில் ரிலீஸ் ஆன குபேரா தெலுங்கில் ஹிட் அடித்தாலும் தமிழில் அட்டர் பிளாப் ஆனது. இதையடுத்து அவர் இயக்கிய இட்லி கடை திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படம் காந்தாராவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி அவரை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

