MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கடும் அப்செட்... துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட விரும்பாத அஜித்...! ஏன் தெரியுமா?

கடும் அப்செட்... துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட விரும்பாத அஜித்...! ஏன் தெரியுமா?

வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை துணிவு படம் படைத்து வந்தாலும், இப்படத்தின் வெற்றியை முழுமனதோடு கொண்டாட முடியாத மனநிலையில் நடிகர் அஜித் உள்ளாராம். 

2 Min read
Author : Ganesh A
Published : Jan 22 2023, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித்தின் 61-வது படம் துணிவு. ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மோகனசுந்தரம், ஜான் கொகேன், அமீர், பாவனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24

வங்கியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையாக பேசி இருந்த இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது. விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமாக அஜித் படத்துக்கு வெளிநாட்டில் குறைந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை இப்படம் தகர்த்தெறிந்துள்ளது. வெளிநாடுகளில் துணிவு படம் மாபெரும் வெற்றியை ருசித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... காதல் படம் சொதப்பியதால் மீண்டும் பேய்க்கதை பக்கம் சென்ற சுந்தர் சி - உருவாகிறது ‘அரண்மனை 4’... ஹீரோ இவரா?

34

இப்படி வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை துணிவு படம் படைத்து வந்தாலும், இப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாத மனநிலையில் நடிகர் அஜித் உள்ளாராம். ஏனெனில் இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இந்த மரணம் அஜித்தை மிகவும் பாதித்துள்ளதாம்.

44

இதனை துணிவு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார். இதன் காரணமாக தான் அவர் துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர், மது அருந்திவிட்டு தியேட்டருக்கு வந்ததால் துணிவு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட விரக்தியில், தூத்துக்குடியில் அஜித் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் வெற்றியை சிம்பிளாக கொண்டாடிய விஜய்... வைரலாகும் சக்சஸ் மீட் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Recommended image2
ஆக்‌ஷன் மோடில் கார்த்திகை தீபம்! புதையல், மோதல் என பறக்கும் காட்சிகள் - லாஜிக் எங்கே எனப் புலம்பும் ரசிகர்கள்!
Recommended image3
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved