- Home
- Cinema
- இயக்குனர் மட்டுமல்ல... ஏகே 62 படத்தின் இசையமைப்பாளரும் மாற்றம்...! அனிருத்துக்கு பதில் இவரா?
இயக்குனர் மட்டுமல்ல... ஏகே 62 படத்தின் இசையமைப்பாளரும் மாற்றம்...! அனிருத்துக்கு பதில் இவரா?
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாக உள்ள ஏகே 62 படத்துக்கு அனிருத்துக்கு பதில் இளம் இசையமைப்பாளர் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் குறித்து தினசரி ஏதேனும் ஒரு அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசியில் அவர் சொன்ன கதை அஜித்துக்கு திருப்தி அளிக்காததால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜித். இதையடுத்து இந்த படத்துக்குள் அதிரடியாக வந்தவர் தான் மகிழ் திருமேனி.
செல்வராகவன், கவுதம் மேனன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர், தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சொன்ன கதையைக் கேட்டு அஜித் மிகவும் இம்பிரஸ் ஆனதால், உடனடியாக அவருடன் பணியாற்ற சம்மதமும் தெரிவித்துவிட்டாராம். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... 2 படம் ஹிட் ஆனதும்... சம்பளத்தை மளமளவென உயர்த்திய சிம்பு..! தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்
ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது போல், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரும் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் அப்படத்தை இயக்காததால், அதிலிருந்து அனிருத்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாக உள்ள ஏகே 62 படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தடம் படத்துக்கு இசையமைத்தவர் ஆவார். அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் இசையமைக்க உள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அனிருத்தை இசையமைக்க வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... லிங்குசாமியின் ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்...? ஹீரோ கார்த்தி இல்லையாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.