- Home
- Cinema
- அஜித், விஜய் பட கதாநாயகி இப்போ சீரியலில்.! சின்னத்திரையில் அதிரடி ரீ-என்ட்ரியாகும் சங்கவி!
அஜித், விஜய் பட கதாநாயகி இப்போ சீரியலில்.! சின்னத்திரையில் அதிரடி ரீ-என்ட்ரியாகும் சங்கவி!
90-களின் முன்னணி நாயகியான சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'பாளையத்து அம்மன்' என்ற பக்தித் தொடரில் அவர் நாயகியாக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.

ரசிகர்களை மகிழ்விக்க வரும் ரசிகன் நாயகி.!
90-களின் முன்னணி நாயகி நடிகை சங்கவி 1993-ல் 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 'ரசிகன்', 'நாட்டாமை', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பின் ரீ-என்ட்ரி
கடந்த 2016-ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சங்கவி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் திரைத்துறையிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் கேமரா முன் வரத் தயாராகிவிட்டார். பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சின்னத்திரையில் தடம் பதிப்பதைப் போலவே, சங்கவியும் இப்போது சீரியல் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.
பாளையத்து அம்மனாக சங்கவி
சங்கவி முதன்முதலில் களமிறங்கும் இந்த புதிய சீரியலுக்கு 'பாளையத்து அம்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பக்தி மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த கதையாக இது உருவாக உள்ளது. இந்தத் தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே 'கோகுலத்தில் சீதை' போன்ற தொடர்களில் நடுவராகச் செயல்பட்டிருந்தாலும், ஒரு முழு நீளத் தொடரில் நாயகியாக சங்கவி நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

