துணிவு vs வாரிசு... பொங்கல் ரேஸில் அதகளப்படுத்திய ஆட்டநாயகன் யார்?... விஜய்யா? அஜித்தா?
அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் ஒரே நாளில் ரிலீசாகி உள்ள நிலையில், இந்த போட்டியில் வென்றது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர். இந்த ஒருபடங்களை தயாரித்ததும் வேறுமாநில தயாரிப்பாளர்கள் தான். துணிவு படத்தை இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரும், வாரிசு படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்து இருந்தனர்.
இந்த இரு படங்களுக்குமே உள்ள மற்றொரு ஒற்றுமை என்னவென்றால் இதன் இசையமைப்பாளர்கள் தான். துணிவு படத்துக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் வாரிசு படத்துக்கு இசையமைத்துள்ள தமனும் விஜய் உடன் பணியாற்றியுள்ளது இதுவே முதன்முறை. இந்த இரண்டு படங்களின் டிரைலரும் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. துணிவு டிரைலரை பார்க்கும் போது பீஸ்ட் படம் போல் உள்ளதாகவும், வாரிசு டிரைலரை பார்க்கும் போது சீரியல் போல இருப்பதாவும் ட்ரோல் செய்யப்பட்டன.
துணிவு
துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பக்கா மாஸாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதோடு, படத்தில் முக்கியமான சமூக கருத்தும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எச்.வினோத்தின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாகவும் இப்படத்திற்கு அடுக்கடுக்கான பாசிடிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படியுங்கள்... இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க..! ஆளுநரை அட்டாக் செய்ற மாதிரி இருக்கே - வைரலாகும் துணிவு வசனம்
வாரிசு
வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பக்கா கமர்ஷியல் திரைப்படம். இப்படம் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த நிறைவான படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும், யோகிபாபுவின் காமெடியும் ஒர்க் அவுட் ஆகி உள்ளதால் இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக நிச்சயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளதாக வாரிசு படத்துக்கும் பாசிடிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
யார் வின்னர்?
இரண்டு படங்களுமே வெவ்வேறு விதமான கதைக்களத்தில் பயணிக்கின்றன. அஜித்தின் துணிவு படம் பக்கா மாஸ் படமாக உள்ளது. அதேபோல் வாரிசு திரைப்படம் பக்கா பேமிலி எண்டர்டெயினராக உள்ளது. மேலும் இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவை பொறுத்தவரை தல தளபதி பொங்கலாகவே அமைந்துள்ளது. இதில் எந்த படத்துக்கு அதிகளவில் கலெக்ஷன் கிடைக்கிறது என்பதை இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... வாரிசு தான் நம்பர் 1.. ரசிகர்களுடன் FDFS பார்த்தபின் காலரை தூக்கிவிட்டு கெத்துகாட்டிய தில் ராஜு - வைரல் வீடியோ