'வலிமை' படத்தில் யங் லுக்கில் கலக்கி இருக்கும் தல அஜித்..! வைரலாகும் ஸ்டைலிஷ் BTS புகைப்படங்கள்..!
'வலிமை' (Valimai) படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடம் போல் காத்திருந்த ரசிகர்களை, மென்மேலும் மகிழ்ச்சியாகும் விதமாக, அடுத்தடுத்து பல அப்டேட் அடிக்கடி வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, அஜித் யங் லுக்கில் (Ajith) கலக்கியுள்ள BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் ரசிகர்கள் அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 'வலிமை' படத்தில் இருந்து தற்போது அவர் மற்ற நடிகர்களுடன் நடித்த போது எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக தன்னுடைய படங்களில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதை விரும்பிய அஜித், 'வலிமை' படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக செம்ம ஸ்டைலிஷான யங் லுக்கில் நடித்துள்ளார்.
மேலும் அஜித், படத்தின் நாயகி ஹுமா குரேஷியுடன் தோன்றியுள்ள புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், ஹுமா குரேஷி ஒரு, ஐடி ஊழியராக வருகிறாரோ என சந்தேகம் எழுகிறது.
'வலிமை' திரைப்படம் ஒரு போலீஸ் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைக்கர்ஸ் கும்பலின் கதையைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ளது என்பது சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வை வெளியானதில் இருந்து தெரியவந்தது.
அதே நேரத்தில், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் இப்படத்தில் குறைவிருக்காது என்பதை, தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலமாகவே தெரிகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அஜித்தை வைத்து அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.