- Home
- Cinema
- கண் பார்வையற்றவர்களுக்காக திரையிடப்பட்ட துணிவு ஸ்பெஷல் ஷோ... மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்ற அஜித்
கண் பார்வையற்றவர்களுக்காக திரையிடப்பட்ட துணிவு ஸ்பெஷல் ஷோ... மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்ற அஜித்
சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் சமுத்திரக்கனி, மோகனசுந்தரம், ஜான் கொகேன், தர்ஷன், பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வங்கியில் நடக்கும் முறைகேடுகளை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். போனி கபூர் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
துணிவு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. அதேபோல் இப்படத்தை லைகா நிறுவனம் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்தது. இப்படி பிரம்மாண்ட நிறுவனங்களால் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் பட்டித்தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... ரிப்பீட் மோடில் நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட் விபத்துகள்.. கடந்த 3மாதத்தில் இத்தனையா! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்
பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் இப்படம் திரையரங்கிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்துள்ளனர். இவர்களுக்காக சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து திரையிட்டு இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.
சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அனைவரும் அஜித் படத்தை ரசித்து பார்த்துள்ளனர். இந்த சிறப்பு காட்சி திரையிடலின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. துணிவு படக்குழுவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... தெலுங்கு பர்ஸ்ட்.. தமிழ் நெக்ஸ்ட்! ஜூனியர் NTR-க்கு ஜோடியான ஜான்வி கபூர்- முதல் படத்துக்கே இவ்ளோ கோடி சம்பளமா?