சென்னை ரைஃபிள் கிளப்பில் தல அஜித்... கையில் துப்பாக்கியுடன் கெத்தாக போஸ் கொடுத்து அசத்தும் போட்டோஸ்...!
பிப்ரவரி 18 ஆம் தேதி, தல அஜித் சென்னை வேப்பேரியில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு பதிலாக, புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ரைஃபிள் கிளப் எங்கே என விசாரித்த போது, ரசிகர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட அஜித், பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகியது.
இதை தொடர்ந்து தற்போது ரைஃபிள் கிளப்பில் அஜித் இருக்கும் சில புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பயிற்சிக்கு முன், கையில் துப்பாக்கியோடு தல டெதாக நிற்கும் புகைப்படம் வேற லெவல்...
வலிமை படப்பிடிப்பில், பிசியாக நடித்து வந்த அஜித், தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும், ஆக்ஷன் காட்சி ஒன்றை மட்டும் வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர், போனி கபூர் போர்ப்ஸ் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா... கடந்த வாரம் 'வலிமை ' படத்தின் பாடல்கள் குறித்து பகிர்ந்திருந்தார். இந்த பாடல் ரெகார்டிங் செய்யப்பட்ட போது, எடுத்த புகைப்படங்களும் வைரலாகியது.
தல அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், எப்படி பைக் ரைடிங், போட்டோ கிராபி, போன்றவற்றில் கவனம் செலுத்துவாரா அதே போல், சமீப காலமாக... துப்பாக்கி சுடுதலில் கவனம் செய்தி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.
அந்த வகையில்... வேப்பேரி ரைஃபிள் கிளப்பில் அஜித் பயிற்சிக்கு தினமும் விசிட் அடித்து வரும் புகைப்படங்கள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.