- Home
- Cinema
- AK 62 : அஜித்துக்கு பிடிக்காத ‘அந்த’ விஷயத்தை செய்த விக்னேஷ் சிவன்... நோ சொல்லி திருப்பி அனுப்பிய ஏ.கே
AK 62 : அஜித்துக்கு பிடிக்காத ‘அந்த’ விஷயத்தை செய்த விக்னேஷ் சிவன்... நோ சொல்லி திருப்பி அனுப்பிய ஏ.கே
AK 62 : ஏ.கே 62 படத்தில் நடிகர் அஜித் ஓட்டல் அதிபராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாம்.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஜான் கொகேன் நடித்து வருகிறார்.
ஏ.கே 61 படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படம் குறித்த அறிவிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் ஓட்டல் அதிபராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாம்.
இந்நிலையில் ஏ.கே.62 படத்தில் அரசியல் வசனங்கள் சிலவற்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் வைத்திருந்ததாகவும், இதனைக் கேள்விப்பட்ட அஜித், இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா எனக்கூறி அந்த வசனங்களை நீக்கிவிடுமாறு கூறிவிட்டாராம். இதனால் அதனை மாற்றியமைக்கும் பணிகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... RJ Balaji : பெண்களை தப்பாக காட்டிய ரஜினி படங்கள்... ஓப்பனாக போட்டுத்தாக்கிய ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.