RJ Balaji : வீட்ல விசேஷங்க படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி பெண்களை மோசமாக சித்தரித்த படங்கள் குறித்து பேசியுள்ளார். 

வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பாப்புலர் ஆனவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அவர், எல்.கே.ஜி., படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இவர் இயக்கத்தில் வீட்ல விசேஷங்க என்கிற படம் தயாராகி உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்தும் இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி பெண்களை மோசமாக சித்தரித்த படங்கள் குறித்து பேசியுள்ளார். அதன்படி ரஜினியின் படையப்பா மற்றும் மன்னன் ஆகிய படங்களில் பெண்களை தப்பாக காட்டியிருப்பார்கள் எனக்கூறிய அவர், இதனால் தான் ஆண்களுக்கும், பெண்களுக்கு இடையே சமூகத்தில் வேற்றுமை உண்டானதாக தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

குறிப்பாக படையப்பா படத்துல வீட்டு வேலை செய்யும் சவுந்தர்யாவை நல்ல பெண்ணாகவும், வெளிநாட்டில் படிச்சிட்டு வந்த ரம்யா கிருஷ்ணனை கெட்டவளாகவும் காட்டி இருப்பார்கள். அதேபோல் மன்னன் படத்தில் வீட்டில் அடக்க ஒடுக்கமாக காபி போட்டு கொடுக்குற குஷ்புவை நல்ல பெண்ணாகவும், படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தியை கெட்டவளாகவும் காட்டி இருப்பார்கள் என ஆர்.ஜே.பாலாஜி கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... D Imman : நாயோடு ஒப்பிட்டு இசையமைப்பாளர் டி இமானை நோஸ் கட் செய்த மாஜி மனைவி - வைரலாகும் டுவிட்டர் பதிவு