- Home
- Cinema
- அடுத்தடுத்து ஸ்விட் நியூஸ் சொல்லும் அஜித்..AK 63, 64-ம் ரெடியாம்..யாருடன், என்ன கதை தெரியுமா?
அடுத்தடுத்து ஸ்விட் நியூஸ் சொல்லும் அஜித்..AK 63, 64-ம் ரெடியாம்..யாருடன், என்ன கதை தெரியுமா?
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத்துடன் கமிட் ஆகியுள்ள அஜித்...அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் 62 -ல் ஓப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து காலதாமதமின்றி 63, 64 படங்களுக்கும் தயாராகி விட்டாராம் அஜித்.

valimai
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அதே டீமுடன் அஜித் கைகோர்த்த படம் தான் வலிமை. அஜித் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் இந்த படத்தில்.
valimai
அஜித்துடன் போலீஸ் அதிகாரியாகவும் காலா பட நடிகை ஹூமா குரேஷியும் இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
valimai
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வெளியான இந்த படம் முதல் மூன்று நாட்களில் ப்ரீ புக்கிங் மூலம் சுமார் 100 கோடியை வசூலித்தது. அதோடு இ]உலகம் முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
valimai
கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் கடந்த மார்ச் 25-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகி 500 + ஸ்ட்ரீமிங்கை பெற்றதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
ajith 61
வலிமையை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் பயணிக்கிறார் அஜித். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியு
AK 62
அஜித் 61 அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே 62 அப்டேட்டும் வந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
Ajith 63
ஏற்கனவே வலிமை படம் இரண்டரை வருட காத்திருப்புக்கு பின்னர் வெளியானதால் அடுத்தடுத்த படங்களை காலதாமம் இல்லாமல் கமிட் ஆகிறார் அஜித். அந்த வகையில் அஜித் 63 படத்திற்காக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் உருவாகி இருந்தது. இதையடுத்து 5 வது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
ajith 64
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து அஜித் 64-ம் ரெடியாகவுள்ளது. இதற்காக டைரக்டர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளாராம் அஜித். இந்த கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.