தளபதி பிறந்தநாளில் ட்ரெண்ட் ஆகும் #தன்னிகரற்ற_தலஅஜித் ஹேஷ்டேக்..! கெத்து காட்டும் அஜித் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யின் பிறந்தநாளான இன்று, அஜித்தின் பெயரில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை வைரலாக்கி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
தளபதி விஜய் இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கொரோனா காலம் என்பதால் தளபதி ரசிகர்கள் பெரிய அளவிற்கு கட்அவுட், பாலபிஷேகம், ஆட்டம், பாட்டம், மாலை, தோரணம் என கொண்டாட வில்லை என்றாலும் கடந்த செவ்வாய் கிழமை அன்றே காமன் டிபி வெளியிட்டு, தளபதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். மேலும் அதிகாலை 12 மணி முதலே விதவிதமான பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
அதே போல் தளபதி ரசிகர்களை மேலும் சந்தோஷமாக்கும் விதத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 65 ஆவது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது போஸ்டர் அதிகாலை 12 மணிக்கு வெளியாகி இரட்டை விருந்தாக அமைந்தது.
மேலும் இந்த இரு போஸ்டர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுகுறித்த ஹேஷ்டேக்குகளும் தற்போது ட்விட்டரில் செம்ம ட்ரெண்டில் இருந்து வருகிறது.
மேலும் இந்த இரு போஸ்டர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுகுறித்த ஹேஷ்டேக்குகளும் தற்போது ட்விட்டரில் செம்ம ட்ரெண்டில் இருந்து வருகிறது.
அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஒன்றாம் தேதியே வலிமை குறித்த அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் நினைத்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படக்குழு, தற்போது வெளியிடவில்லை என அறிவித்தது.
விரைவில் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தளபதி ரசிகர்களுக்கு நிகராக இன்றைய தினம் தல குறித்த ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.