அஜித் யாருடைய காலில் விழுந்தார் தெரியுமா? விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு!
Ajith Kumar Airport Blessings Video: நடிகர் அஜித் குமார் வயதான ஒருவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இந்த ஆண்டில் மட்டும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ என்ற 2 படங்களை வெளியிட்டார். இதில் விடாமுயற்சி ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் அடுத்து வெளியான குட் பேட் அக்லீ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்ற சுல்தானா பாடல் ரீல்ஸாக உருவாகி வைரலானது.
கார் ரேஸில் பிஸியான அஜித்
இந்த படத்திற்கு பிறகு கார் ரேஸில் பிஸியான அஜித் கிட்டத்தட்ட 9 மாதங்கள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை தேடிக் கொடுத்தார். சமீபத்தில் இத்தாலி வெனிஸில் நடந்த ஒரு பிரம்மாண்டமான விழாவில், அஜித்திற்கு ஆண்டின் சிறந்த ஜென்டில்மேன் டிரைவருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அஜித் தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கரூர் சம்பவம் குறித்து கருத்து
கரூர் சம்பவம் குறித்தும் அஜித் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், அஜித் பகவதி அம்மனின் உருவத்தை டாட்டூவாக பச்சை குத்தியிருந்தது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் அஜித் இப்போது ஒருவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். அவர் யார் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
அஜித் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் போது வயதான ஒருவர் வீல் சேரில் இருப்பதைக் கண்டுள்ளார். பின்னர், அவர் அருகில் சென்று அவரது காலில் விழுந்து வணங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக அஜித் யாரையும் காலில் விழ வைப்பது கிடையாது. தனது ரசிகர்கள் காலில் விழ வரும் போது கூட அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் செஃல்பி எடுத்துக் கொள்வார். அப்படியிருக்கும் போது அவரா இப்படி ஒருவரது காலில் விழுந்திருக்கிறார் என்று பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இன்னும் சிலர் அஜித்தின் எளிமையை பறைசாற்றி வருகின்றனர்.
ஏகே64 அப்டேட்
குட் பேட் அக்லீயைத் தொடர்ந்து அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் காம்பினேஷனில் ஏகே64 படம் உருவாக இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதோடு படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு ஏகே64 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் உருவாகும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தனுஷ் மற்றும் அஜித் காம்போவில் ஒரு படம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.