MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.100 கோடி சம்பளம்.. கையில் வெறும் சாதாரண போன்! அஜித்தின் எளிமைக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

ரூ.100 கோடி சம்பளம்.. கையில் வெறும் சாதாரண போன்! அஜித்தின் எளிமைக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

Ajith Kumar Samsung Galaxy S22 Model Mobile Phone : கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் அஜித் குமார், மிகவும் எளிமையான செல்போனைப் பயன்படுத்தி வருவது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 23 2026, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அஜித் பயன்படுத்தும் செல்போன், Ajith Kumar mobile phone details
Image Credit : Asianet News

அஜித் பயன்படுத்தும் செல்போன், Ajith Kumar mobile phone details

நடிகர், ரேஸர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் அஜித் குமார். திரையில் அவர் காட்டும் மாஸை விட, நிஜ வாழ்க்கையில் அவர் கடைபிடிக்கும் கண்ணியம் மற்றும் ஒழுக்கம் தான் அவரை பல கோடி ரசிகர்களுக்குப் பிடித்தமான 'தல'யாக மாற்றியுள்ளது. குறிப்பாக, பொது இடங்களில் பெண்களிடம் அவர் காட்டும் மரியாதை, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவது என அஜித்தின் ஒவ்வொரு செயலும் ஒரு முன்னுதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

25
அஜித்தின் வைரல் செய்திகள், Ajith Kumar viral news today
Image Credit : @ajithFC

அஜித்தின் வைரல் செய்திகள், Ajith Kumar viral news today

அஜித்தின் மிக முக்கியமான நற்பண்புகளில் ஒன்று, அவரது ஜனநாயகக் கடமை. படப்பிடிப்பு அல்லது கார் பந்தயம் என உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் சென்னைக்குத் திரும்பி முதல் ஆளாக வந்து வாக்களிப்பதை அவர் ஒருபோதும் தவறியதில்லை. அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக, பெல்ஜியத்தில் கார் பந்தயப் பயிற்சியில் இருந்த அஜித், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விரைந்தார்.

35
தல அஜித் கோடிக்கணக்கான சம்பளம், Thala Ajith salary per movie
Image Credit : @ajithFC

தல அஜித் கோடிக்கணக்கான சம்பளம், Thala Ajith salary per movie

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, சரியாக 6.45 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு அஜித் வருகை தந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கருப்பு கண்ணாடி ஒரு சர்வதேச ரேஸருக்கான கம்பீரத்தைக் கொடுத்தது. வழக்கமாகப் பொது இடங்களுக்கு வரும்போது கையில் செல்போன் எடுத்து வராத அஜித், இந்த முறை ஒரு கருப்பு நிற ஸ்மார்ட்போனை வைத்திருந்தார். மேலும், அங்கு கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைத் தனது செல்போனில் செல்பி வீடியோவாகவும் அவர் பதிவு செய்தார்.

கோட் சூட்டில் என்ட்ரி… சுற்றி இருந்தவர்களை தனது ஃபோனில் வீடியோ எடுத்தபடியே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த நடிகர் அஜித்..!#Chennai | #Ajithkumar | #TNElection2026 | #Tamilnadu | #ElectionBooth | #Election2026 | #PolimerNewspic.twitter.com/v7RcBrGTxP

— Polimer News (@polimernews) April 23, 2026

45
அஜித் குமார் எளிமை, Ajith Kumar simplicity stories
Image Credit : @ajithFC

அஜித் குமார் எளிமை, Ajith Kumar simplicity stories

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்களின் கண்கள் அஜித் கையில் வைத்திருந்த செல்போன் மீது திரும்பியது. பொதுவாகத் திரையுலகப் பிரபலங்கள் என்றாலே லட்சக்கணக்கிலான விலையுள்ள அதிநவீன போன்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அஜித் கையில் வைத்திருந்தது Samsung Galaxy S22 மாடல் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த மொபைலின் விலை ரூ.85,000 என்றும் தெரிகிறது. மேலும், இந்த மொபைலில் வயர்லெஸ் சார்ஜிங், 128 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 புராசஸர் மற்றும் அமோல்டு டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன.

55
Samsung Galaxy S22 மாடல்
Image Credit : @TrollywoodX

Samsung Galaxy S22 மாடல்

"விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் மீது ஆர்வம் கொண்ட அஜித், அன்றாட பயன்பாட்டிற்கு இவ்வளவு எளிமையான போனைப் பயன்படுத்துவது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது" என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆடம்பரம் இல்லாத அஜித்தின் இந்த எளிமை, மீண்டும் ஒருமுறை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 'ஆடம்பரம் என்பது காட்டும் பொருளில் இல்லை, நாம் வாழும் விதத்தில் உள்ளது' என்பதை மீண்டும் ஒருமுறை அஜித் நிரூபித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#ElectionsWithTOI | #AjithKumar cast his vote at a polling station in #Thiruvanmiyur, #Chennai, as voting began across 234 seats in #TamilNadu. Chaos erupted at the polling booth as fans gathered in large numbers to catch a glimpse of the actor 🗳️

Track LIVE… pic.twitter.com/H4AtrB9bzt

— The Times Of India (@timesofindia) April 23, 2026

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
அஜித் கார் பந்தயம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் முதல் ஜான்வி கபூர் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
நடிகருடன் டூ மச் நெருக்கம்... லிப் லாக் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்த பிக்பாஸ் மகேஸ்வரி!
Recommended image3
Ajith Support Vijay?!: "வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொல்லவில்லையாம்.! சட்டென பறந்து வந்த விளக்கம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved