வேதாளம் கிரிஞ் படம்னா... எதுக்கு ரீமேக் பண்ணுன? போலா ஷங்கர் இயக்குனரை ரவுண்டு கட்டி வெளுத்துவாங்கிய அஜித் fans
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் ஒரு கிரிஞ் படம் என கூறிய தெலுங்கு இயக்குனர் மெஹர் ரமேஷை அஜித் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வேதாளம். கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பெரியளவில் வெற்றியை ருசிக்காவிட்டாலும், அஜித் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக இருந்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். வேதாளம் படத்தில் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருந்தது அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் தான். இப்படத்தின் அஜித்துக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடலாக இருந்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வேதாளம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. போலா ஷங்கர் என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.
மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். போலா ஷங்கர் திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி நடிகை ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், போலா ஷங்கர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் அஜித்தின் வேதாளம் படத்தை கிரிஞ் படம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் ஜெயிலர் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்!
மேலும் வேதாளம் படத்தில் அஜித் நடித்ததை விட சிரஞ்சீவியின் நடிப்பு போலா ஷங்கர் படத்தில் 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என கூறி உள்ள அவர், வேதாளம் படத்தைவிட இப்படத்திற்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளதாக கூறி இருக்கிறார். மெஹர் ரமேஷின் பேச்சைக் கேட்டு கொந்தளித்த அஜித் ரசிகர்கள், கிரிஞ் படம்னா எதுக்கு ரீமேக் பண்ணுன என கேள்வி எழுப்பியதோடு, அவரை சரமாரியாக தாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர்.
இதைப்பார்த்து ஷாக் ஆன இயக்குனர் மெஹர் ரமேஷ், பதறிப்போய் டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 2015 இல் வேதாளம் படம் பார்த்தபோது அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அண்ணன், தங்கை பாசத்துடன் அதன் ஒரிஜினல் கதையை இயக்குனர் சிவா உருவாக்கி இருந்ததை நான் ரசித்தேன். இது மில்லியன் கணக்கான மக்களுடன் பிரதிபலிக்கும் ஒரு உணர்வு. அதை எங்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் காட்ட விரும்பினேன்.
2009-ல், அஜித்தின் பில்லாவை டார்லிங் பிரபாஸை வைத்து ரீமேக் செய்தேன், இப்போது மீண்டும் அஜித் சாரின் ஆக்ஷன் என்டர்டெய்னரான “வேதாளம்” படத்தை மெகாஸ்டாரை வைத்து போலா ஷங்கராக உலகம் முழுவதும் 2 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது. வாய்ப்புக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் ‘அந்த பயம் இருக்கணும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சிறுவாபுரி கோவிலில் தீண்டாமை கொடுமை நடந்ததா? நடிகர் யோகி பாபு பரபரப்பு விளக்கம்!