ஏகே 61-லும் இதே தோற்றம் தானா? விமர்சனத்திற்கு ஆளானாலும் தோற்றத்தை மாற்றாத அஜித்
அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் உடல் எடை கூடி இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அஜித் 61 வது படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

valimai
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் மீண்டும் கைகோர்த்த அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காலா பட நடிகை ஹீமா குரோஹி இணைந்திருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் அஜித் 61வது படம் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
valimai
இதையடுத்து பிரபல நடிகை நயன்தாராவின் காதலனும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 62வது படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.
valimai
முன்னதாக வலிமை படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டிருந்த ப்ளூ சட்டை மாறன். அஜித் உடல் எடை கூடியிருப்பதாகவும், முகத்தில் தொப்பை இருப்பதாகவும், பாட்டிற்கு நடனம் அட முடியாமல் திணறுவதாகவும் கலாய்த்து வாங்கி கட்டி கொண்டார். ஆனால் உண்மையில் வலிமை படத்தில் உடல் எடை கூடி இருந்தார் அஜித்.
ajith 61
இதை தொடர்ந்து அஜித்தை தற்போது நடித்து கொண்டிருக்கும் 61 வது படத்தின் லுக் ஏற்கனவே வெளியானது. பெப்பர் சால்ட் ஸ்டைலில் இருந்து மொத்தமாக ஒயிட் கேர்ஸ்டைலுடன் வெர்லெவல் லுக் வெளியானது. இந்த படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ak 61
அஜித் ரசிகருடன் இருக்கும் இந்த புகைப்படத்தில் அஜித் ஏற்கனவே வெளியான லுக்கில் தான் இருக்கிறார். ஆனால் வலிமை படத்தை இருந்தவாறே உடல் எடையுடன் தான் இதிலும் அஜித் காணப்படுகிறார். இவருக்கு அதிக சர்ஜரி நடந்துள்ளதால் உடல் எடையை குறிக்கும் பயிற்சியை எடுப்பது கடினம் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.