அஜித் மற்றும் விஜய் மீண்டும் மோதல்: டிசம்பர் 5ல் திரைக்கு வரும் காவலன்!
Attagasam vs Kavalan : நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அட்டகாசம் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் காவலன் படம் திரைக்கு வருகிறது.

அட்டகாசம் - காவலன்
நாளுக்கு நாள் ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான டிரெண்டும் அதிகமாகி வருகிறது. தற்போது உள்ள சூழலில் டாப் நடிகர்களின் எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் அவர்களது பழைய படங்களை மீண்டும் திரையில் ரிலீஸ் செய்வதை திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படித்தான் இதற்கு முன்னதாக நடிகர்களின் படங்கள் வெளியாகி மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்தன.
அஜித் குமார் - தளபதி விஜய்
அந்த வரிசையில் இப்போது அஜித்தின் அட்டகாசம் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் அதனை கொண்டாடி வரும் சூழலில் விஜய்யின் காவலன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஆம், விஜய்யின் காவலன் படம் வரும் 5ஆம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது அஜித் மற்றும் விஜய் இருவரது படங்களும் திரையில் மோதுகின்றன. ஆனால், என்ன ஓரிரு நாட்களுக்கு பிறகு வெளியாகின்றன.
அட்டகாசம் ரீ ரிலீஸ்
நடிகர் அஜித் ரசிகர்கள் அட்டகாசம் திரைப்படத்தில் வரும் "தீபாவளி தல தீபாவளி" பாடலில் நடிகர் அஜித் வேட்டி சட்டை அணிந்து நடனம் ஆடும் இந்த பாடலை திரையரங்குகளில் பார்க்கும் போது எல்லை இல்லாத மகிழ்ச்சி தான்..இந்த பாடலின் போது தியேட்டர்க்குள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அஜித் மற்றும் விஜய்
நடிகர் அஜித் ரசிகர்கள் அட்டகாசம் திரைப்படத்தை கொண்டாடியதை போல நடிகர் விஜய் ரசிகர்களும் தயாராக உள்ளனர். நடிகர் விஜய், அசின், ராஜ் கிரண், வடிவேலு ஆகியோர் நடித்த காவலன் திரைப்படம் ரீரிலிஸ் ஆகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
காவலன் ரீ ரிலீஸ்
காவலன் 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதை சித்திக் எழுதி இயக்கினார். இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும். ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அட்டகாசம் - காவலன்
நடிகர் அஜித் திரைப்படம் அட்டகாசம் வெளியானதற்கு நடிகர் அஜித் ரசிகர்கள் அட்டகாசம் திரைப்படத்திற்கு தந்த வரவேற்பை மிஞ்சும் அளவிற்கு விஜய் ரசிகர்கள் காவலன் திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். அட்டகாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் தந்துள்ளார்கள் அதேபோல் விஜய் ரசிகர்கள் விஜயின் காவலன் திரைப்படத்திற்கு நல்ல வசூலையும் வரவேற்பையும் தருவார்களா என்று காத்திருந்து பார்ப்போம். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் எஜமான் படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.