MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AK 61 Update : 50 வயதை கடந்த நடிகையுடன் ஜோடி சேரும் அஜித்.... ‘என்ன தல இதெல்லாம்’ என ஷாக் ஆன ரசிகர்கள்

AK 61 Update : 50 வயதை கடந்த நடிகையுடன் ஜோடி சேரும் அஜித்.... ‘என்ன தல இதெல்லாம்’ என ஷாக் ஆன ரசிகர்கள்

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களிலும் பாலிவுட் நடிகைகளை தான் ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தனர். தல 61 படத்துக்கும் அதே பார்முலாவை பின்பற்ற உள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 26 2022, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

35

இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களிலும் வித்யா பாலன், ஹூமா குரேஷி என பாலிவுட் நடிகைகளை தான் ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தனர். தல 61 படத்துக்கும் அதே பார்முலாவை பின்பற்ற உள்ளனர்.

45

அதன்படி இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

55

தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. அஜித் தென்னிந்திய ஹீரோயினுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘என்ன தல இதெல்லாம்’ என ஷாக் ரியாக்‌ஷனுடன் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்
Recommended image2
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!
Recommended image3
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved