Raghava Lawrence : ஓ... இதுதான் விஷயமா!! லாரன்சை வைத்து பேய் படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
Raghava Lawrence : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. மேலும் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
பன்முகத்திறமை கொண்டவர் லாரன்ஸ்
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய லாரன்ஸ், பின்னர் நடிகராக உயர்ந்து தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான முனி என்கிற பேய் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமே ஹிட் ஆனதால் அடுத்தடுத்து படங்களை இயக்க ஆர்வம் காட்டினார்.
லாரன்ஸை பாப்புலர் ஆக்கிய காஞ்சனா
குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய காஞ்சனா என்கிற பேய் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து அப்படத்தின் 2 மற்றும் 3-ம் பாகங்களையும் இயக்கி வெளியிட்டு வெற்றி வாகை சூடினார் லாரன்ஸ். காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அக்ஷய் குமார் நடித்த இப்படத்தை லாரன்ஸ் தான் இயக்கினார். இருப்பினும் தமிழ் அளவுக்கு அங்கு அப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிப்பில் ரொம்ப பிசி
லக்ஷ்மி பாம் படத்தின் தோல்விக்கு பின் படங்கள் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்ட லாரன்ஸ் நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது அவர் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன், துரை செந்தில்குமாரின் அதிகாரம், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர துர்கா என்கிற படத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார் லாரன்ஸ்.
அடுத்த பேய் படம் துர்கா
முதலில் துர்கா படத்தை லாரன்ஸ் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த வாய்ப்பை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவுக்கு வழங்கினார் லாரன்ஸ். அவர்கள் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்தனர். அண்மையில் பிற படங்களில் பிசியானதால் துர்கா படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்தனர்.
இயக்கப்போவது யார்?
இதையடுத்து அந்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. மேலும் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இதைவைத்து பார்க்கும்போது லாரன்ஸின் துர்கா படத்தை இயக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் அடித்த நடிகை கைது - 30 பேரின் பர்சுகளை அபேஸ் செய்தது அம்பலம்