தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தனுஷை சமீபத்தில் விவாகரத்து செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

aishwarya rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இணை பிரியாமல் இருந்த இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். காதல் ஜோடிகளாக வளம் வந்த இவர்கள் சமீபத்தில் தங்களது விவகாரத்தை அறிவித்தனர்.
Aishwarya rajinikanth
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரவர் சமூகவலைத்தள பக்கத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.பின்னர் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகி விட்டனர். தனுஷ் கோலிவுட்,டோலிவுட், ஹாலிவுட் என தெறிக்கவிட்டு வருகிறார்.
Aishwarya rajinikanth
ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பம், பட இயக்கம் என புது புது அவதாரத்தில் மாஸ் காட்டி வருகிறார். டைரக்ஷனில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டதோடு, ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Aishwarya rajinikanth
தற்போது சைக்கிளிங், ஒர்கவுட் ,யோகா என படு பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் உலா வருகிறது. அதாவது அப்பார்ட்மெண்ட், பண்ணைவீடு , பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.