- Home
- Cinema
- Lal Salaam: தொலைந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்ததால் மீண்டும் சென்சார் செய்யப்பட்ட லால் சலாம்! ஓடிடி ரிலீஸ் எப்போது?
Lal Salaam: தொலைந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்ததால் மீண்டும் சென்சார் செய்யப்பட்ட லால் சலாம்! ஓடிடி ரிலீஸ் எப்போது?
Lal Salaam Censored: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், வெளியான லால் சலாம் திரைப்படத்தில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது 2-ஆவது முறையாக சென்சார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் லால் சலாம். ஒரு கிராமத்தில், நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டியது. இந்த படத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, மற்றொரு ஹீரோவாக விக்ராந்த் நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில், கேமியோ ரோலில் நடிக்க, நிரோஷா, விவேக் பிரசன்ன, தான்யா, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லால் சலாம் தோல்விக்கு காரணம்:
குறிப்பாக ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற வெயிட்டான ரோலில் நடித்தும் கூட, படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் தோல்விக்கு காரணம், ஷூட்டிங்கில் இருந்து தன்னுடைய ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது தான் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓடிடியில் ரிலீசாகும் முன்பே டிவியில் ஒளிபரப்பாக உள்ள லால் சலாம் - எப்போ தெரியுமா?
தொலைந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்தது
இதன் காரணமாக இந்த படத்தின் ஓடிடியிலும் சிக்கல் ஏற்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்து அந்த காட்சிகளை இணைத்து இந்த படத்தை வெளியிடுவேன் என கூறி இருந்தார். ஒரு வழியாக தற்போது தொலைந்து போன அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்ததை தொடர்ந்து தற்போது, லால் சலாம் திரைப்படமும் ஓடிடி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகிறதா லால் சலாம்
புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு இந்த படம் வெளியாக உள்ளதால், தற்போது புதிய காட்சிகளுடன் சென்சார் செய்யப்பட்டுள்ளதாம். இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவுப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நேரம், மீண்டும் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் என்ன என்று ஐஸ்வர்யா தரப்பில் யோசித்து வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் சுற்றி வந்தாலும், இதற்க்கு லைகா நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 2 நாளில் காலி பண்ணிய விடுதலை 2!