அகிலன் முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற மார்ச் 10-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படமும் மார்ச் 10-ந் தேதி திரைகாண உள்ளது. தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ரீ மோகன் பாபுவின் கன்னட நாடக கதையைத் தழுவி இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கும் சாம் சி.எஸ். தான் இசையமைத்து இருக்கிறார்.
ஜிவி, 8 தோட்டாக்கள் போன்ற படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் வெற்றி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சைக்கோ திரில்லர் படம் தான் மெமரீஸ். ஷியாம் பிரவீன் இயக்கியுள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்து உள்ளார். இப்படமும் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... பார்த்திபன், முரளி பட பாணியில் கோடிக்கணக்கில் மோசடி: ஆபிஸை மாத்திக்கிடேயிருந்த பிரபல நடிகையின் சகோதரி கைது!
நேரடியாக டிவியில் ரிலீஸ் ஆகும் கன்னித்தீவு
வரலட்சுமி சரத்குமா, சுபிக்ஷா, ஆஸ்னா ஜவேரி, ஐஸ்வர்யா தத்தா ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ள திரைப்படம் கன்னித்தீவு. இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், லிவ்விங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சுந்தர் பாலு. அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் வருகிற மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்.
கவின் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்ற டாடா திரைப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி மற்றும ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ரன் பேபி ரன் திரைப்படமும் வருகிற மார்ச் 10-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதுதவிர யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து பா.இரஞ்சித் தயாரித்திருந்த பொம்மை நாயகி திரைப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடித்த கிறிஸ்டி என்கிற திரைப்படமும் மார்ச் 10-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அப்போ புரில, இப்போ புரிது - புது வீடு கட்டும் ஹூசைன் மணிமேகலை - வைரலாகும் பண்ணை வீடு பாலக்கால் பூஜை வீடியோ!