“மாஸ்டர்” கொடுத்த தைரியம்... விஜய்யால் முடிவை மாற்றிக்கொண்ட விஷால், கார்த்தி...!
தளபதி விஜய்யின் அதேபாணியைக் கடைபிடிக்க நடிகர்க்ள் விஷால், கார்த்தி முடிவு செய்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதலில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற கண்டிஷன் உடன் படம் வெளியானதால் ரசிகர்கள் மட்டுமில்லாது விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் தற்போது படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதலில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்பட்ட மாஸ்டர் தளபதி விஜய்யின் விடாப்பிடியான முடிவால் தியேட்டரில் வெளியானது. தற்போது அதேபாணியைக் கடைபிடிக்க நடிகர்க்ள் விஷால், கார்த்தி முடிவு செய்துள்ளனர்.
Chakra
இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் என்பவர் இயக்கத்தில் சக்ரா படத்தில் விஷால் நடித்துள்ளார். விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடந்த மாதமே இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் முதலில் ஓடிடியில் படத்தை திரையிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓடிடி நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முடித்துக் கொண்ட விஷால், பிப்ரவரி 12ம் படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
அதேபோல் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படமும் ஓடிடி நிறுவனத்துடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை நிறுத்திவிட்டதாம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.