சமந்தா அவுட்... சாய் பல்லவி இன்...! - புஷ்பா 2 படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புஷ்பா 2 படத்தில் இருந்து சமந்தா வெளியேறிய நிலையில், தற்போது புதிதாக சாய் பல்லவி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீசாகி பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் புஷ்பா. பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கிய இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படதிற்காக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படி பக்கா கமர்ஷியல் படமாக பிரம்மாண்ட வெற்றி கண்ட இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் அதன் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... ஜாலியாக ஹோலி கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்... இணையத்தை கலக்கும் கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ஐட்டம் சாங் ஒன்று இடம்பெறுவதாகவும், இதிலும் நடிகை சமந்தாவை ஆட வைக்க படக்குழு முயற்சி செய்தது. ஆனால் நடிகை சமந்தா, ஆட முடியாது என மறுத்துவிட்டார். இதனால் புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகையை கவர்ச்சி நடனம் ஆட வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புஷ்பா 2 படத்தில் இருந்து சமந்தா வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புஷ்பா 2 படத்தில் இருந்து சமந்தா வெளியேறிய நிலையில், தற்போது புதிதாக சாய் பல்லவி எண்ட்ரி கொடுத்துள்ளார். ஐட்டம் டான்ஸ் ஆட அவரை ஒப்பந்தம் செய்யவில்லையாம், படத்தில் அவருக்கு மிக முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டு உள்ளதால் சாய் பல்லவி இதில் கமிட் ஆகி இருக்கிறாராம். படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்து கதாபாத்திரமாக சாய் பல்லவியின் கேரக்டர் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக 10 நாள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம் சாய் பல்லவி.
இதையும் படியுங்கள்... சிம்புவின் திருமணம் இப்படித்தான் நடக்கும்... மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் பேட்டி