MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பர்ஸ்ட் ரஜினி, நெக்ஸ்ட் SK; இப்போ இவரா? டான் இயக்குனருக்கு விபூதி அடித்த மற்றுமொரு மாஸ் ஹீரோ!

பர்ஸ்ட் ரஜினி, நெக்ஸ்ட் SK; இப்போ இவரா? டான் இயக்குனருக்கு விபூதி அடித்த மற்றுமொரு மாஸ் ஹீரோ!

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க மறுத்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகர் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2025, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Cibi Chakaravarthi Film With Nani Shelved : இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இவர் இயக்கிய முதல் படமே ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய ரஜினிகாந்த், சிபியை அழைத்து கதை கேட்டார். பின்னர் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்ட ரஜினிகாந்த், வேறு படங்களில் பிசியானதால் சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Sivakarthikeyan, Cibi

Sivakarthikeyan, Cibi

ரஜினிகாந்த் பட வாய்ப்பு கைநழுவி போனதால், சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து அவரின் 24வது படத்தை இயக்க தயாராகி வந்த சிபி சக்கரவர்த்தி. அப்படத்திற்கு பாஸ் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சிபி சக்கரவர்த்தி படத்தை கிடப்பில் போட்டார் எஸ்.கே. இதனிடையே தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானியுடன் பணியாற்ற வாய்ப்பு வந்ததால் சிவகார்த்திகேயனுக்கு டாட்டா காட்டிவிட்டு டோலிவுட் பறந்தார் சிபி.

இதையும் படியுங்கள்... டான் இயக்குனருக்கு டாடா காட்டிவிட்டு... ‘தலைவர் 171’ பட வாய்ப்பை இளம் இயக்குனருக்கு கொடுத்த ரஜினிகாந்த்?

34
Rajinikanth, Cibi

Rajinikanth, Cibi

தற்போது அங்கும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. நானியை வைத்து ஒரு காமெடி நிறைந்த பேமிலி செண்டிமெண்ட் படத்தை இயக்க இருந்தாராம் சிபி. ஆனால் தற்போதைய சூழலில் ஆக்‌ஷன் படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ள நானி, இந்த நேரத்தில் காமெடி படத்தில் நடித்தால் அது தன் ஆக்‌ஷன் இமேஜுக்கு செட் ஆகாமல் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

44
Nani

Nani

அதுமட்டுமின்றி படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருந்ததால் அப்படத்தை ஓரங்கட்டிவிட்டு ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம் நானி. தற்போது ஹிட்: தி தேர்ட் கேஸ் படப்பிடிப்பை முடித்துள்ளார் நானி, இந்த படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'தி பாரடைஸ்' படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் நானி, ரத்தம் சொட்ட சொட்ட வன்முறை நிறைந்த படமாக தி பாரடைஸ் உருவாக உள்ளது சமீபத்தில் வெளியான அதன் முன்னோட்ட வீடியோவிலேயே தெரிந்தது. இப்படத்தை தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா தான் இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்...தியேட்டரில் 100 கோடி வசூல் அள்ளிய நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved