மகளுக்காக மீண்டும் பாட்ஷா ஆகும் ரஜினி...! லால் சலாம் படத்தின் வேறலெவல் அப்டேட் இதோ
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் யோகிபாபு, கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் வஸந்த் ரவி, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்.
ஜெயிலர் படத்தை தொடந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... அஜித்தின் துணிவு படம் பாதியில் நிறுத்தம்... கடுப்பாகி பணத்தை திருப்பிக்கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம்
இப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போதே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்தில் முஸ்லீம் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக பாட்ஷா படத்தில் தான் முஸ்லீமாக நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு எந்த படத்திலும் முஸ்லீம் வேடம் அமையாமல் இருந்த நிலையில், தற்போது 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் லால் சலாம் படத்திற்காக அவர் முஸ்லீம் வேடத்தில் நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... திடீரென ஜல்லிக்கட்டு இயக்குனர் பக்கம் சென்ற சூர்யா... அப்போ வாடிவாசல் உடன் வெயிட் பண்ணும் வெற்றிமாறன் நிலைமை?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.