‘காப்பாத்துங்க’... காருக்குள் இருந்து கதறிய யாஷிகா ஆனந்த்... விபத்து குறித்து வெளியான பகீர் தகவல்...!
நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு விபத்தில் சிக்கியதை அடுத்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Yashika anand
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், யாஷிகா உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yashika anand
பிரபல நடிகையான யாஷிகா நேற்று தன் நண்பர்களான வள்ளி செட்டி பவணி, ஆமீர், சையது ஆகியோருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றதாக தெரிகிறது. அங்கிருந்து திரும்பிய யாஷிகா தானே காரை ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது விபத்துக்குள்ளானது.
Yashika anand
கார் தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அப்போது நள்ளிரவு ஒரு மணி என்பதால் சாலையில் வாகனம் மற்றும் மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. எனவே காருக்குள் சிக்கிய யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் எங்களை காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பியுள்ளனர். இந்த அலறலைக் கேட்ட அப்பகுதி மக்கள் அவசர, அவசரமாக ஓடி வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அப்போது தான் விபத்தில் சிக்கியது நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Yashika anand
இதையடுத்து போக்குவரத்து போலீசார் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்த காரை வெளியே எடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.
Yashika anand
இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது யாஷிகாவும் அவருடைய நண்பர்களும் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.