கமலின் அதிரடி கூட்டணி... 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ...!
First Published Dec 28, 2020, 7:22 PM IST
இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்றொரு நடிகர் குறித்து கசிந்துள்ள தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

‘மாநகரம்’ படம் மூலம் திரையுலகை தன்பால் திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனராஜுக்கு ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு அடித்த ஜாக்பாட்டாக தான் தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல் முறையாக எதிரும் புதிருமாக களமிறங்கும்‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதற்கான தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?