- Home
- Cinema
- சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு தரமான சம்பவம்...!
சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு தரமான சம்பவம்...!
கடைசியாக 2001ல் ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகினார் ஷாலினி.

தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு. தல அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே 2002ல் அஜித், ஷாலினி திருமணம் கோலாகலமாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.

திரையுலகில் ஷாலினிக்கு இன்றளவும் பெயர் சொல்லும் படி அமைந்த திரைப்படம் என்றால் அது ‘அலைபாயுதே’. காதல் என்ற வார்த்தைக்கான புது புரட்சியுடன் மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்றளவும் காதலர்களின் பேவரைட் மூவியாக உள்ளது.

கடைசியாக 2001ல் ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகினார் ஷாலினி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஷாலினி சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கும் ஷாலினிக்கும் மிகவும் பிடித்த மணிரத்னத்தின் படம் என்பதால் அஜித்தும் ஓகோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ஷாலினியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகமாக உருவாக உள்ளதாக சமீபத்தில் வெளியான நிலையில், பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.