16 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சூப்பர் ஹிட் பட ஜோடி.... இணையத்தை கலக்கும் ஒற்றை போட்டோ!
First Published Dec 14, 2020, 3:15 PM IST
தற்போது கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பிறகு சந்தியாவும், பரத்தும் ஒன்றாக எடுத்துக் கொண்டு செல்ஃபி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதலை அழகாக வர்ணிக்க ஆயிரம் படங்கள் இருந்தாலும் அதன் வலிகளை உணர்வு பூர்வமாக விவரிக்க சில படங்கள் மட்டுமே உள்ளன. அதில் இந்த கால இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது என்றால் அது “காதல்” படம் தான்.

பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது. டீன் ஏஜ் பருவ மாணவிக்கு அழகானவர்கள் மீது தான் ஈர்ப்பு வரும் என்றில்லை, உண்மை காதல் அழுக்கான ஒருவனை பார்க்கும் போதும் உதிக்கும் என காட்டியிருப்பார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?