10 வருடத்திற்கு பின்... விஜய் 65 படத்தில் தளபதிக்கு ஜோடியாகிறாரா முன்னணி நடிகை!
10 வருடத்திற்கு பின்... விஜய் 65 படத்தில் தளபதிக்கு ஜோடியாகிறாரா முன்னணி நடிகை!
தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக எப்போது 'மாஸ்டர்' படம் வெளியாகும் என்பது, விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
இந்த படத்திற்கு பின், விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 65 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை, சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ புரோடுக்ஷன் வேளைகளில் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் இந்த படத்தின் ஹீரோயின் தேர்வும்... இந்த லாக் டவுன் நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், விஜய்யுடன் கடந்த 2010 ஆண்டு சுறா படத்தில் நடித்த நடிகை தமன்னா, மீண்டும்.... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள 65 வது படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளாராம்.
மற்றொரு மெயின் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.