கார்த்தி பட நடிகைக்கு அடித்த லக்...கொஞ்ச காலத்திலேயே இவ்ளோ கெத்தாகிட்டாங்களே
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த காற்று வெளியிடை படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி தற்போது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது.

aditi rao hydari
அதிதி ராவ் ஹைதாரி நடிகை, நடனக் கலைஞர் மற்றும் பாடகி என இந்தி , தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் பணியாற்றுகிறார்.
aditi rao hydari
2006 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பிரஜாபதி மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் சுதிர் மிஸ்ராவின் 2011 ஆம் ஆண்டு காதல் திரில்லர் திரைப்படமான யே சாலி ஜிந்தகியில் நடித்ததன் மூலம் ஹைதாரி புகழ் பெற்றார்.
aditi rao hydari
யே சாலி ஜிந்தகி படம் அதிதி ராவ் ஹைதாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான திரை விருதை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து இசை ராக்ஸ்டார், ஹாரர்-த்ரில்லர் மர்டர் 3, அதிரடி-காமெடி பாஸ் மற்றும் திரில்லர் வாசிர் உள்ளிட்ட பல ஹிட் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
aditi rao hydari
2018 ஆம் ஆண்டு காவியத் திரைப்படமான பத்மாவத் திரைப்படத்தில் ராணி மெஹ்ருனிசாவாக அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும் .
aditi rao hydari
முன்னதாக 2017 ஆம் ஆண்டில், மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் டாக்டர். லீலா ஆபிரகாமின் முக்கிய கதாபாத்திரத்தில் ஹைதாரி நடித்தார்.
aditi rao hydari
காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தோன்றியிருந்தார் அதிதி ராவ் ஹைதாரி. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு சிறந்த அறிமுக தமிழ் நடிகைக்கான SIIMA விருதை கிடைத்தது.
aditi rao hydari
நல்ல வெற்றி கண்ட போதிலும் தமிழில் இவருக்கு அவ்வளவாக மார்க்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்மோகனம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் . பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த இவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
aditi rao hydari
இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி தற்போது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 1 கோடி ரூபாயாம். காருடன் அதிதி ராவ் ஹைதாரி கொடுத்துள்ள போஸ் தான் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.