- Home
- Cinema
- யார் அந்த ரம்யா? 5 படத்துக்கும் ஒரே பெயரா? குட் பேட் அக்லீ படத்துக்கும் அதே பேர வச்ச ஆதிக் ரவிச்சந்திரன்!
யார் அந்த ரம்யா? 5 படத்துக்கும் ஒரே பெயரா? குட் பேட் அக்லீ படத்துக்கும் அதே பேர வச்ச ஆதிக் ரவிச்சந்திரன்!
Adhik Ravichandran Select Same Name Ramya For All His Movies in Tamil : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கிய எல்லா படங்களிலேயும் ஒரே விதமான பெயரைத் தான் தேர்வு செய்திருக்கிறார். இதன் மூலமாக யார் அந்த ரம்யா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Adhik Ravichandran Select Same Name Ramya For All His Movies in Tamil : த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். டபுள் மீனிங் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஜிவி பிரகாஷ், ஆனந்தி, மணீஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கேமியோ ரோலில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஆனந்தி ரம்யா என்ற ரோலில் நடித்திருந்தார்.
Ajith Kumar, Good Bad Ugly, Who Is Ramya
2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு பிறகு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் சிம்பு, தமன்னா, ஷ்ரேயா, விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தமன்னாவை ரம்யா என்ற ரோலில் நடிக்க வைத்திருந்தார் இயக்குநர்.
Adhik Ravichandran, Cinema News Tamil
மூன்றாவதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பகீரா படம் வெளியானது. இதில், பிரபு தேவா, ஸ்ரீகாந்த், அமிரா தஸ்தூர், காயத்ரி, ரெம்யா நம்பீசன், ஜனனி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர் ரம்யா என்ற ரோலில் நடித்திருந்தார். கடைசியாக ஆதிக் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படம் வெளியானது. இதுவரையில் வந்த படங்களில் இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
Adhik Ravichandran Films, Good Bad Ugly Movie
இந்தப் படத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதே போன்று தான் எஸ் ஜே சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவர்கள் தவிர ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரிது வர்மா ரம்யா என்ற ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, யோகி பாபு, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித் ஏகே மற்றும் சூர்யபிரகாஷ் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் த்ரிஷா ரம்யா என்ற ரோலில் நடித்துள்ளார்.
Adhk Ravichandran Directions, Who is Ramya
இப்படி ஒரு படத்தில் இல்ல, தனது 5 படத்திலேயுமே ஹீரோயினுக்கு ரம்யா என்ற பெயரையே தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதற்கான காரணம் என்ன, ஏன் இப்படி ஹீரோயினுக்கு ரம்யா என்ற பெயரை தேர்வுகிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தவிர, இவருடைய படங்களில் பெரும்பாலும் இரட்டை ரோல் கதாபாத்திரம் இருக்கிறது. சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் ஆண்டனி ஆகிய 2 படங்களில் இரட்டை வேடங்கள் இருந்த நிலையில் இப்போது குட் பேட் அக்லீ படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.