- Home
- Cinema
- பாலியல் சீண்டல்கள் எனக்கும் நடந்திருக்கு.. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் இதற்கு காரணம்- விஜயலட்சுமி ஓபன் டாக்
பாலியல் சீண்டல்கள் எனக்கும் நடந்திருக்கு.. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் இதற்கு காரணம்- விஜயலட்சுமி ஓபன் டாக்
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வரும் விஜயலட்சுமி மீடூ குறித்து ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசி உள்ளார்.

சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், கற்றது களவு, கசடதபற போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரை மிகவும் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் வைல்டு காட்டு போட்டியாளராக கலந்துகொண்ட இவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்தார். இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய விஜி, டைட்டில் வின்னர் ஆனது மட்டுமின்றி ரூ.1 கோடி பரிசுத் தொகையையும் வென்றார்.
இதையும் படியுங்கள்... சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது.
சிறுவயதில் நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்றபோது அந்த மாஸ்டர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதை உடனே என் தந்தையிடம் வந்து சொன்னேன். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே குட் டச் எது பேட் டச் எது என்பதை சொல்லிக்கொடுத்தால் இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்பாக இருக்கும்” என விஜயலட்சுமி ஒப்பனாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சீரியல் முடிந்த கையேடு... நியூ லுக்கில் ரசிகர்களை கவரும் 'செம்பருத்தி' ஷபானா! மாடர்ன் லுக்கில் மிரட்டுறாங்களே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.