MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்; ரஜினியின் மனைவியிடம் கேளுங்கள் - விசித்ரா ஆக்ரோஷம்

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்; ரஜினியின் மனைவியிடம் கேளுங்கள் - விசித்ரா ஆக்ரோஷம்

திரைத்துறையில் நடிகைகளுக்கு நிகழும் அநீதிகள் குறித்து நான் பீல்டில் இருக்கும்போதே நடிகர் சங்கம், காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றேன், ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Sep 04 2024, 11:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actress Vichithra

Actress Vichithra

நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் குறித்து அண்மையில் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாளத் திரையுலகில் பூகம்பத்தைக் கிளப்பி உள்ள நிலையில், இது தொடர்பாக நடிகை விசித்ரா பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். திரைத்துரையில் நடைபெறும் பாலியல் அத்துமீறல் குறித்து எந்தவொரு முன்னணி நடிகரும் கருத்து தெரிவிக்கவில்லை. அப்படி பார்த்தால் ஊடகங்கள் தவறான நபர்களிடம் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் நடிகர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக நடிகர்களின் மனைவிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

25
Actress Vichithra

Actress Vichithra

நீங்கள் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் அவரின் மனைவி லதா ரஜினிகாந்திடமோ, அல்லது அவரது மகள்களிடம் சென்று கேளுங்கள். ரஜினிகாந்த் அவரது படம் வெளியாக வேண்டும் என்ற பரபரப்பில் உள்ளார். மலையாளத் திரை உலகில் தான் இந்த சம்பவம் முதன் முதலாக ஆரம்பித்தது. மலையாள திரையுலகமாக இருந்தாலும் அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். இதனை நாங்கள் யார் தூண்டுதலிலும் செய்யவில்லை. ஒரு பெண்ணாக கஷ்டத்தை உணர்ந்து இதை செய்கிறோம்.

35
Actress Vichithra

Actress Vichithra

இப்பிரச்சினை குறி்து பேச முன்வராதவர்களுக்கு மனசாட்சி இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும்? ஒவ்வொருவரிடமும் சென்று  இது தொடர்பாக பேசுங்கள் என்று கேட்க முடியுமா? முதலில் நடிகைகளே இது தொடர்பாக தைரியமாக வெளியில் கூறுவது கிடையாது. அப்படி எத்தனை பேர் வெளியில் பேசுகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

45
Actress Vichithra

Actress Vichithra

தற்போதும் பலரும் பாலியல் சார்ந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களை ஏன் புகாராக அளிக்கவில்லை என்று கேட்கின்றனர். மேலும் சம்பவம் நடந்து இவ்வளவு காலம் கழித்து ஏன் இப்போது இதனை பேசுகிறீர்கள் என்று கேட்கின்றனர். நான் திரைத்துறையில் பிசியாக இருந்தபோதே எனக்கு நடந்த அநீதிகளை காவல் நிலையத்திலும், நடிகர் சங்கத்திலும் தெரிவித்தேன். ஆனால் என்னாலும் எதுவும் செய்ய முடியவி்ல்லை.

55
Actress Vichithra

Actress Vichithra

நடிகர்கள் சினிமாவில் சற்று பிரபலமடைந்து நல்ல நிலையை அடைந்தவுடன் அவர்களுக்கு அரசியல் மற்றும் தொழில் துறையில் உள்ள பெரிய பெரிய நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் அவர்களுக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்கான பிரச்சினைகளில் இருந்து எளிதில் வெளிவந்து விடுகின்றனர். தெலுங்கிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.    

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image2
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image3
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved