MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?

பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?

சினிமாவில் பாலியல் தொல்லைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக நடிகைகள் கூறும் நிலையில், அதனை தவிர்க்க நடிகைகள் இந்த முறையை கடைபிடிக்கலாம் என மூத்த நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 29 2024, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Urvashi About Harassment

Urvashi About Harassment

கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள ஹேமா கமிட்டியின் அறிக்கை, மலையாள திரையுலகையே பதற வைத்துள்ள நிலையில், கேரளாவில் பிறந்து, தமிழில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஊர்வசி பாலியல் தொந்தரவு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Urvashi Debut in Child artist at the age of 9

Urvashi Debut in Child artist at the age of 9

தன்னுடைய 9 வயதில், மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்வசி, ஹீரோயினாக நடித்த முதல் படம் தமிழில் தான்.  இயக்குனர் பாக்யராஜ் நடித்து - இயக்கி 1983 ஆம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தால், போன்ற ஏராளமான படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்த் பட வசூலை பார்த்து பயந்துட்டார் எம்.ஜி.ஆர் ! எந்த படம்? முக்தா ரவி கூறிய ஆச்சர்ய தகவல்!

37
Urvashi about Hema Committee

Urvashi about Hema Committee

இவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ஹீரோயினாக நடிக்க  தொடங்கினார். இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், "நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது இப்போது வந்தது அல்ல. நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பில் இருந்தே உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை சில நடிகைகள் அனுபவித்துள்ளனர். அது பற்றி என்னிடம் பகிர்ந்துள்ளனர்.

47
Urvashi About This issue

Urvashi About This issue

ஆனால் அந்த காலகட்டத்தில், இது பற்றி நடிகைகள் பெரிதாக வெளியில் பேசிக் கொள்வது இல்லை. இப்போது  திரைத்துறையில் உள்ள பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனை நடிகைகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை தண்டிக்க வாய்ப்பாக இது மாறி உள்ளது.

அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள்! 3 நாளில் புதிய குழு - நடிகர் விஷால் பேட்டி!

57
Malayalam Actress Face it Bold

Malayalam Actress Face it Bold

கேரள திரையுலகில் மட்டுமே இது போல் நடக்கவில்லை. வட இந்தியாவிலும் படிப்பறிவு இல்லாத பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது, கேரளா சற்று முன்னேறி இருக்கிறது என்று தான் நினைக்க தோன்றுகிறது. கேரள பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளனர். பாலியல் தொந்தரவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது, இங்கு முற்போக்குத்தனமான பெண்கள் இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. தங்களைப் போல் இனி யாரும் இதுபோல் பாதிப்படைய கூடாது என்கிற என்கிற நோக்கத்தில் சில பெண்கள் இதை எதிர்த்து போராடுகின்றனர்.

67
Urvashi Idea

Urvashi Idea

தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன என்பதை உறுதி செய்துள்ள நடிகை ஊர்வசி... இது போன்ற பிரச்சனைகளை நடிகைகள் எதிர்கொள்ளாமல் இருக்க சில டிப்சுகளை கூறியுள்ளார். பொதுவாக படம் பற்றி பேசுவதாக இருந்தால், ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் பேசலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கு வர சொன்னால் அது போன்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டும். இதை ஒரு விதிமுறையாகவே சினிமா துறை சார்ந்த சங்கங்கள் கொண்டுவர வேண்டும். 

ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?
 

77
This is not Harassment

This is not Harassment

அதையும் மீறி சிலர் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டால், அதற்கும் சங்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கூற வேண்டும். அப்போதுதான் பலர் தனியாக யாரையும் சந்திக்க மாட்டார்கள். இதுபோன்ற பாலியல் சர்ச்சைகளும் குறையும் என தெரிவித்துள்ளார். அதே நேரம் ஒரு பெண்ணை பார்க்கும் போது ஆண்களுக்கு விருப்பம் ஏற்படுத்துவது உண்டு இதை சிலர் வெளிப்படையாக கூறலாம். இதெல்லாம் பாலியல் சீண்டல் என கூறமுடியாது. ஒரு பெண்ணின் தொழிலையே முடக்கும் அளவுக்கு அவளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தாலோ... விருப்பம் இல்லாமல் உடல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாலோ அது தான் பாலியல் தொந்தரவு என ஊர்வசி கூறியுள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(7.1 ov)62/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved