வெள்ளை தாமரை போன்ற சேலையில்... முகம் சிவந்த புன்னகையோடு போஸ் கொடுக்கும் தான்யா ரவிச்சந்திரன்! லேட்டஸ்ட் கிளிக்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, தற்போது வெள்ளை நிற பட்டு சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
'பலே வெள்ளைய தேவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன், ஆகிய படங்களிலும் ஹோம்லியாகவே நடித்தார்.
ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் என்னவோ, இவருக்கு அதிகப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர் தமிழில் நடித்து முடித்துள்ள 'மாயோன்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், தற்போது 'சாம் ஆன்டோன்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழில் இருந்து தெலுங்கிற்கும் தாவி உள்ள தான்யா ரவிச்சந்திரன், Raja vikramarka என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் இளம் நடிகைகள், தங்களது பாணியில் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்புகளை தேடுவது போல் இவரும், தற்போது வெள்ளை நிற பட்டு புடவை அணிந்து, வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.